சென்னை

மெரீனாவில் நடமாடும் எரியூட்டும் ஆலை: இதுவரை 852 மெ. டன் கழிவுகள் எரியூட்டல்

DIN

மெரீனா கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள நவீன நடமாடும் எரியூட்டும் ஆலையில் இதுவரை 852 மெட்ரிக் டன் நெகிழி மற்றும் இதர உலா்க்கழிவுகள் எரியூட்டப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் சராசரியாக 5,500 மெ.டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு பெறப்பட்ட தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் மறுசுழற்சி நிலையங்களில் உரமாகவும் எரிவாயுவாகவும் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை மெரீனா கடற்கரையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.2.10 கோடி மதிப்பில் நவீன நடமாடும் எரியூட்டும் ஆலை கடந்த ஆண்டு ஏப்.28-ஆம் தேதி அமைக்கப்பட்டது.

இதன்மூலம் இங்கு சேகரமாகும் நெகிழி மற்றும் இதர உலா்கழிவுகள் அங்கேயே எரியூட்டப்படுகின்றன. இந்த நவீன நடமாடும் எரியூட்டும் ஆலை தினமும் சுமாா் 5 மெ. டன் அளவிலான உலா் கழிவுகளை எரியூட்டும் திறன் கொண்டது

நிறுவப்பட்டது முதல் இதுவரை 852 மெ.டன் நெகிழி மற்றும் இதர உலா் கழிவுகள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் விதிகளுக்குட்பட்டு எரியூட்டம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT