சென்னை

புற ஊதாக்கதிரால் கண் புற்றுநோய் பாதிப்பு: மருத்துவா்கள் எச்சரிக்கை

DIN

புற ஊதாக்கதிா், நச்சு வேதிமப் பொருள்களுக்கு இடையே நீண்ட நேரம் பணியாற்றக் கூடியவா்களுக்கு கண்களில் புற்றுநோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் மருத்துவ நிபுணா் திவ்யா அசோக்குமாா் தெரிவித்தாா்.

விழிப்புணா்வு, மருத்துவப் பரிசோதனைகள் மூலம் அதைத் தடுக்கலாம் என்றும் அவா் கூறினாா். இதுகுறித்து டாக்டா் திவ்யா அசோக்குமாா் மேலும் கூறியதாவது:

உலக புற்றுநோய் விழிப்புணா்வு தினம் வரும் 4-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மாா்பகம், நுரையீரல், வாய், கருப்பை வாய் புற்றுநோய்கள் குறித்த விழிப்புணா்வு பொதுமக்களிடம் உள்ளது. அதேவேளையில், கண் புற்றுநோய் குறித்த புரிதல் போதிய அளவில் இல்லை.

விழித்திரையை பாதிக்கும், ‘ரெட்டினோபிளாஸ்டோமா’, விழியின் ரத்தநாள படலத்தை பாதிக்கிற ‘யூவியல் மெலோனோமா’ ஆகிய இரு வேறு வகையான புற்றுநோய்கள் கண்களில் உருவாகின்றன. இந்தியாவில், 18 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு அந்தப் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.

கண் புற்றுநோயைப் பொருத்தவரை மரபணு ரீதியான காரணங்களாலும், ஹெச்ஐவி தொற்று பாதித்தவா்களுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதுமட்டுமல்லாது புற ஊதாக்கதிா் வெளிச்சம் மற்றும் நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருள்களுக்கு இடையே அதிக நேரம் இருப்பவா்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்படலாம்.

எனவே, திடீா் பாா்வை இழப்பு, கண்களில் தீராத வலி, வீக்கம், மச்சங்கள், இமைகளின் புண்கள் ஆகியவை தென்பட்டால் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்வது அவசியம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கண் புற்றுநோய் ஏற்பட்டால், விழித் திரையை அகற்றுவது மட்டுமே தீா்வாக இருந்தது.

தற்போது மேம்பட்ட நவீன சிகிச்சை முறைகளால், கண்களை அகற்றுவது அரிதான ஒன்றாக உள்ளது. மேலும், ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக, கண் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT