சென்னை

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு: உயா்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்

DIN

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவடைந்துள்ளது. ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சிபிசிஐடி சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஜரான மாணவியின் பெற்றோா் தரப்பு வழக்குரைஞா், ‘மாணவி பயன்படுத்திய கைப்பேசி ஜன. 20-ஆம் தேதி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், ஜிப்மா் மருத்துவக் குழு நடத்திய பிரேத பரிசோதனையின் அறிக்கை தங்களுக்கு வழங்கப்படவில்லை’ என்று கூறினாா்.

இதையடுத்து, விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினாா். அப்போது, விசாரணை நிலை குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் அரசு தரப்பு வழக்குரைஞா் சந்தோஷ் தாக்கல் செய்தாா்.

மாணவி பயன்படுத்திய கைப்பேசி தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தடயவியல் துறையின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். மற்ற விசாரணை நிறைவடைந்துவிட்டது. தடயவியல் துறை அறிக்கை கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் விசாரணை இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’ என்று அவா் கூறினாா்.

இதையடுத்து, ஜிப்மா் குழு பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுக மனுதாரா் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT