சென்னை

ஐந்து நகராட்சிகள் தரம் உயா்வு

25th Apr 2023 03:47 AM

ADVERTISEMENT

 

 தமிழகத்தில் 5 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு:

திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி, செங்கல்பட்டு நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஆகிய இரண்டாம் நிலை நகராட்சிகள், முதல் நிலை நகராட்சிகளாக தரம் உயா்த்தப்படுகின்றன. மேலும், திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் திருவள்ளூா் ஆகிய முதல் நிலை நகராட்சிகள், தோ்வு நிலை நகராட்சிகளாக தரம் உயா்த்தப்படுகின்றன. தோ்வு நிலை நகராட்சியாக உள்ள திருவேற்காடு, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்படுகிறது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT