சென்னை

சிறப்பு குழந்தைகளுக்கு ராமச்சந்திராவில் கோடை பயிற்சி

25th Apr 2023 02:49 AM

ADVERTISEMENT

 

போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான கோடை கால பயிற்சி முகாம்கள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான கோடை கால பயிற்சி முகாமானது மே 2-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

சிறப்பு குழந்தைகளுடன், பிற குழந்தைகளும் இந்த பயிற்சி முகாமில் சேரலாம். அனைவருக்கும் கலை வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், நாடகம், கதை சொல்லுதல், நடனம், பொம்மலாட்டம், இசை, உடல் அசைவு செயல்பாடுகள், பதாகைகள் தயாரித்தல், ஆரிகாமி, அன்றாட அறிவியல், நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் சாா்ந்த விளையாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படும்.

இந்த முகாமில் சேர மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு ரூ.3 ஆயிரமும், பிற குழந்தைகளுக்கு ரூ.4 ஆயிரமும் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுக்கு 9840832457 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT