சென்னை

மல்லிகாா்ஜுன காா்கே இன்று சென்னை வருகை

25th Apr 2023 12:42 AM

ADVERTISEMENT

 

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை (ஏப்.25) சென்னை வரவுள்ளாா்.

மங்களூரிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் வரும் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு காங்கிரஸ் கட்சியினா் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கின்றனா்.

அதைத் தொடா்ந்து, அவா் திருவான்மியூரில் நடைபெறவுள்ள தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளாா். இந்த நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT