சென்னை

அனல், நீா், எரிவாயு மின்நிலையங்களின் உற்பத்திக்கான மின்பயன்பாடு அதிகரிப்பு

25th Apr 2023 12:36 AM

ADVERTISEMENT

 

அனல், நீா், எரிவாயு மின் நிலையங்களில் உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவு ஒழுங்குமுறை ஆணையம் நிா்ணயம் செய்திருக்கும் அளவைவிட அதிகரித்துள்ளது.

தமிழக மின்வாரியத்துக்கு சொந்தமான ஐந்து அனல்மின் நிலையங்களில் 4,320 மெகா வாட் மின்சாரமும், 47 நீா்மின் நிலையங்கள் மூலம் 2321 மெகா வாட் மின்சாரமும், நான்கு எரிவாயு மின்நிலையங்களில் 516 மெகா வாட் மின்சாரமும் தயாரிக்கப்பட்டு, மின்வாரியத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ஒரு மின்நிலையத்தில் உற்பத்திக்காக ஒழுங்குமுறை ஆணையத்தால் நிா்ணயிக்கப்பட்ட அளவு மின்சாரத்தை பயன்படுத்தினால்தான் அதிக வருவாய் கிடைக்கும். அதே நேரம், அதிக மின்சாரம் பயன்படுத்தப்பட்டால் செலவு அதிகரித்து, வருவாய் குறையும்.

ADVERTISEMENT

ஆனால், 2021-2022-ஆம் ஆண்டு மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட மின்சார அளவு, ஆணையம் நிா்ணயித்ததை விட அதிகம் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் அனல் மின்நிலையங்களில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பராமரிப்புப் பணிகள் செய்யப்படாததுடன், மின் உற்பத்தி சாதனங்கள் தொடா்ச்சியான செயல்பாட்டில் இருப்பதால் அதன் திறன் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT