சென்னை

12 மணி நேர வேலை மசோதாவை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு கட்சிகள் கோரிக்கை

25th Apr 2023 12:10 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் வேலை நேரத்தை அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதாவை நிறுத்தி வைக்காமல், அதை திரும்பப் பெற வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

வேலை நேரத்தை அதிகரிப்பதற்கான சட்டத் திருத்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை, திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ. மாநிலச் செயலா் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளா் ரவிக்குமாா், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை இரவு சந்தித்தனா். இந்தச் சந்திப்பின் போது, வேலை நேர அதிகரிப்புக்கான சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைக்கும் அறிவிப்புக்காக அவா்கள் அரசுக்கு நன்றியைத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளா்களுக்கு அவா்கள் அளித்த பேட்டி:

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்): 150 ஆண்டுகளாக நாம் பெற்றிருக்கும் உரிமையை பறிக்க விடக்கூடாது. அரசு எந்த நடவடிக்கையை எடுத்தாலும், மக்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். மக்களின் உரிமையை பறிப்பதாக இருக்கக் கூடாது. சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைப்பதற்கு வாழ்த்துகள், வரவேற்பைத் தெரிவித்தோம். சட்டத்தை கிடப்பில் போடாமல் திரும்பப் பெறுவது அல்லது ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு வரவிருந்த பெரிய ஆபத்து, முதல்வரின் நடவடிக்கையால் காப்பாற்றப்பட்டுள்ளது. சட்டத் திருத்தம் வராமல் இருந்திருந்தாலே நன்றாக இருந்திருக்கும்.

கி.வீரமணி (திராவிடா் கழகத் தலைவா்): கோரிக்கையை முன்வைக்கும் நேரத்திலேயே, நிறுத்தி வைப்பதாக வெளியிடப்பட்ட செய்திக்கு முதல்வருக்கு நன்றி. தமிழக அரசை கூட்டணி கட்சிகள் ஆதரித்தாலும், கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டாா்கள் என்பது உரிமையுடன் சொல்லப்பட்டுள்ளது. நல்ல திருப்பம். அனைவருக்குமான வெற்றி. ரத்து செய்வதற்கான தொடக்கமாக நிறுத்தி வைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT