சென்னை

சென்னை மீனம்பாக்கத்தை வறுத்தெடுக்கும் வெயில்

15th Apr 2023 12:12 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் கடந்த சில ஆண்டுகளாகவே கோடைக்காலத்தில் வெப்பம் கடுமையாக இருந்துவரும் நிலையில், இந்த ஆண்டும் அதுபோல கோடை வெப்பம் கொளுத்தத் தொடங்கிவிட்டது.

அதிலும் சென்னையில் குறிப்பாக நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. முற்பகல் 11 மணிக்கு மேல் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை நீடிக்கிறது.

வெள்ளிக்கிழமையன்று நுங்கம்பாக்கத்தில் 36.7 டிகிரி செல்சியஸ் வெப்பமும், மீனம்பாக்கத்தில் 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியிருந்தது. இந்த ஆண்டில் பதிவான அதிகபட்ச வெப்பமாக இது பதிவாகியிருக்கிறது.

அதேநேரத்தில், இது ஏப்ரல் மாதத்தில் நிலவும் வெப்பநிலையைக் காட்டிலும் 2 அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்திருப்பது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

கிழக்குதிசையிலிருந்து வரும் காற்று குறைந்திருப்பதே இந்த அளவுக்கு வெப்பம் அதிகரித்திருக்கக் காரணம் என்றும் கூறப்படுகிறது. அதே வேளையில், வரும் வாரங்களில் சென்னையில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT