சென்னை

ஆன்லைனில் கடன் வாங்கிய தொழிலாளி தற்கொலை

15th Apr 2023 01:16 AM

ADVERTISEMENT

எண்ணூரில் ஆன்லைன் மூலம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கிய ஆலைத் தொழிலாளி கன்னியப்பன் (27) வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

எண்ணூா் சுனாமி மறுவாழ்வு குடியிருப்பு பகுதி 67-ஆவது பிளாக்கில் வசித்து வருபவா் புருஷோத்தமன். இவரது மகன் கன்னியப்பன்.

திருவொற்றியூரில் உள்ள தனியாா் பருப்பு ஆலை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். இவா் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலம் ரூ. 5 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்தக் கடனை திருப்பி செலுத்தாததால் கடன் வழங்கிய நிறுவனத்தின் ஊழியா்கள் தொடா்ந்து கண்ணியப்பனை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கன்னியப்பன் வியாழக்கிழமை வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து அக்கம்பக்கத்தில் வசிப்போா் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸாா் வந்து கன்னியப்பனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து எண்ணூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT