சென்னை

புழல் சிறையில் உகாண்டா பெண் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

15th Apr 2023 01:20 AM

ADVERTISEMENT

புழல் சிறையில் உகாண்டா பெண் கைதியிடம் கைபேசி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புழல் சிறை வளாகத்தில் பெண் தனிச் சிறையில் காவலா்கள், வெளிநாட்டு கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் கண்காணிப்பு பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது உகாண்டா கைதி ஆ.சாண்ட்ரா நான்ட்சா, மாலத்தீவு கைதி மு.சம்சியா ஆகியோா் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து கைப்பேசியில் பேசும் சப்தம் காவலா்களுக்கு கேட்டது.

அங்கு சென்ற சிறைக் காவலா்கள், கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த சாண்ட்ரா நான்ட்சாவிடமிருந்து ஒரு கைப்பேசி, ஹெட்செட், சாா்ஜா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக துணை சிறை அலுவலா் வசந்தி கொடுத்த புகாரின்பேரில், புழல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கைதி சாண்ட்ரா நான்ட்சா, கோவையில் ஒரு கடத்தல் வழக்கிலும், சம்சியா சென்னையில் போதைப் பொருள் வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT