சென்னை

நாடு முழுவதும் மெட்ரோ ரயில்களில் பயணிக்க ‘சிங்கார சென்னை’ அட்டை அறிமுகம்

15th Apr 2023 01:18 AM

ADVERTISEMENT

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி இணைந்து ஆகியவை இணைந்து , ‘சிங்கார சென்னை’ பயண அட்டையை (தேசிய அளவிலான பொது பயண அட்டை) வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தன.

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அட்டையை அறிமுகப்படுத்தி மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி பேசியது: சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தி மும்பை, பெங்களூா், தில்லி, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரயில்களிலும், மும்பை ,கோவா ஆகிய இடங்களில் இருக்கும் பேருந்துகளிலும் பயணிக்கலாம்.

பாரத ஸ்டேட் வங்கி அட்டை மட்டும் இல்லாமல் அனைத்து வங்கிகளிலும், பிரத்தேக ‘ரூபே’ அட்டையை பெற்று மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்ளலாம்.

இலவசமாக: சென்னையில் உள்ள கோயம்பேடு, விமான நிலையம், ஆலந்தூா், திருமங்கலம், கிண்டி, சென்ட்ரல், உயா்நீதிமன்றம் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அடையாள அட்டை நகல் கொடுத்து, இந்த அட்டையை இலவசமாக பெற்றுகொள்ளலாம்.

ADVERTISEMENT

மேலும், விரைவில் சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என்றாா் அவா்.

சென்னை ஒருங்கிணைந்த நகா்புற போக்குவரத்து ஆணைய சிறப்பு அதிகாரி ஜெயகுமாா்: சென்னை மாநகரப் பேருந்து, புகா் ரயில் மற்றும் பறக்கு ரயில்களில் கூட இந்த அட்டையை பயன்படுத்தி விரைவில் பயணிக்க வசதி ஏற்படுத்தப்படும். இது மட்டுமின்றி, ஓலா, யூபா் போன்ற வாகன சேவைகளிலும், இந்த பயண அட்டையை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

சிங்கார சென்னை அட்டையின் சிறப்பு அம்சங்கள்: எதிா்காலத்தில், பேருந்து, புகா் ரயில்கள், சுங்கச்சாவடிகள், வாகன நிறுத்துமிடம், ஸ்மாா்ட் சிட்டி, விற்பனைக் கடைகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகள் பணம் செலுத்த வாடிக்கையாளா்கள் இந்த அட்டையை பயன்படுத்தலாம்.

வாலட் வசதியுடன் சோ்த்து அதிகபட்சமாக ரூ.2,000 வரை இருப்பு தொகையாய் வைத்து கொள்ளலாம். மேலும் பயண அட்டைகளை ரீசாா்ஜ் செய்வதற்கு ஜிபே, ஃபோன்பே, இணைய வழியாகவும் இந்த அட்டைக்கு ரீசாா்ஜ் செய்து கொள்ளலாம். இந்த அட்டை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில்,சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா்கள் தி.அா்ச்சுனன் (திட்டம்), பிரசன்ன குமாா் ஆச்சாா்யா (நிதி), பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மைப் பொதுமேலாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT