சென்னை

பெரம்பூர் ரயில் நிலையத்தில் கணக்கில் வராத ஒரு கோடியே 75 லட்சம் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை

30th Sep 2022 01:13 PM

ADVERTISEMENT

கஞ்சா சோதனை நடத்த சென்ற அண்ணாநகர் மாவட்ட மது அமலாக்கப் பிரிவு போலீசார், கணக்கில் வராத பணமான ஒரு கோடியே 75 லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். 

பெரம்பூர் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்த தகவலையடுத்து அண்ணாநகர் மாவட்ட  மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் மஞ்சுளா தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜு மற்றும் தலைமை காவலர்கள் பாலா, மற்றும் பாலாஜி மேலும் முதல் நிலை காவலர் ஜெயராமன் முன்னிலையில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

இதையும் படிக்க- அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை

அப்போது முன்பதிவில்லா பெட்டியில் வந்த ஆந்திரத்தைச் சேர்ந்த அபிஷேக் மற்றும் சூரிய சந்திரகாந்த் ஆகியோர் சந்தேகத்திகிடமான முறையில் இருந்ததால், இருவரிடம் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் மறைத்து எடுத்து வந்த சுமார் ஒரு 1 கோடியை 75 லட்ச ரூபாய் பணம் அவர்களிடம் இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார் அருகில் உள்ள செம்பியம் காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

முதற்கட்ட விசாரணையில் பணத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நுங்கம்பாக்கம் வருமானத்துறை அதிகாரிகள் காவல் நிலையம் வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பணத்தை சரி பார்த்து அண்ணாநகர் மது அமலாக்கு பிரிவு போலீசார், நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT