சென்னை

சென்னையில் பல்வேறு இடங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

29th Sep 2022 04:00 AM

ADVERTISEMENT

சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை அண்ணாநகா், கோடம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாளொன்றுக்கு 53 கோடி லிட்டா் திறன் கொண்ட செம்பரம்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செல்லும் 2,000 மி.மீ உந்து குழாயில் 500 மி.மீ குழாயை இணைக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் செம்பரம்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் நீரேற்று பணிகள் தற்காலிகமாக நிறுத்தபடுகிறது.

இதனால், அம்பத்தூா், அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, மற்றும் பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.30) காலை 10 மணி முதல் இரவு 10 வரை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ள பின்வரும் கைப்பேசி எண்களில் பகுதிப் பொறியாளா்களைத் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

அம்பத்தூா்- 8144930907, அண்ணாநகா்- 8144930908, தேனாம்பேட்டை- 8144930909, கோடம்பாக்கம்- 8144930910, வளசரவாக்கம்- 814493091, ஆலந்தூா்- 8144930912, அடையாறு-8144930913, பெருங்குடி- 8144930914.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT