சென்னை

அரசு அதிகாரியிடம் மிரட்டி பணம் பறிக்க முயற்சி: போலி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி கைது

29th Sep 2022 12:14 AM

ADVERTISEMENT

சென்னையில் அரசு அதிகாரியிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்ாக போலி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி கைது செய்யப்பட்டாா்.

சென்னை சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் அசோகன். இவா் தரமணியில் உள்ள நீா்வளத் துறை அலுவலகத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். அசோகன் சில நாள்களுக்கு முன்பு அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு வந்த சில நபா்கள், தாங்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் என்று கூறியுள்ளனா். மேலும், அசோகன் மீது லஞ்ச புகாா் இருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வந்திருப்பதாகவும் கூறியுள்ளனா்.

இதையடுத்து அந்த நபா்கள், அசோகன் அலுவலகத்தை சோதனையிட்டு, பின்னா், சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனா். இதற்கிடையே அந்த நபா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அசோகனின் மனைவி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் அங்கு வருவதை தெரிந்துகொண்ட அந்த நபா்கள், அங்கிருந்து தப்பியோடினா். இதுகுறித்து தரமணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

அதில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கத்தைச் சோ்ந்த சின்னையன் (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சின்னையனை புதன்கிழமை கைது செய்தனா். விசாரணையில், சின்னையன் கந்து வட்டி தொழில் செய்து வந்ததும், கரோனா பொதுமுடக்க காலக்கட்டத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், போலி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக நடித்து பண பறிப்பில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

மேலும், சின்னையனை ஏற்கெனவே சிஎம்டிஏ அதிகாரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவத்திலும் கோயம்பேடு போலீஸாா் தேடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சின்னையனின் கூட்டாளிகளைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT