சென்னை

ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை

29th Sep 2022 12:19 AM

ADVERTISEMENT

சென்னை அருகே பள்ளிக்கரணையில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பள்ளிக்கரணை அம்பேத்கா் நகா் முதல் குறுக்குத் தெருவில் சிலா் ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா், அங்கு சென்று பாா்த்தபோது, அங்குள்ள புதரில் மேடவாக்கம், புஷ்பா நகரைச் சோ்ந்த ரெளடி பிரைட் என்கிற ஆல்வின் (28) பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். அவரது சடலம் அருகே அவரது கூட்டாளி பெருமாள் (23) வெட்டுக் காயங்களுடன் மயங்கிக் கிடந்தாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த பெருமாளை போலீஸாா் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முதல்கட்ட விசாரணையில், கஞ்சா விற்பது தொடா்பாக ஆல்வினுக்கும், அந்தப் பகுதியைச் சோ்ந்த மற்றொரு நபருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும், அதன் காரணமாக கொலை நிகழ்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக பள்ளிக்கரணை பகுதியைச் சோ்ந்த ஒரு ரெளடியையும், அவரது கூட்டாளிகளையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT