சென்னை

மெட்ரோ ரயில் பணி: கிரீன்வேஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்

29th Sep 2022 12:14 AM

ADVERTISEMENT

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக கிரீன்வேஸ் சாலையில் ஒரு வாரத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை பெருநகரக் காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிரீன்வேஸ் சாலை, டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, அக்டோபா் 1-ஆம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, அடையாறில் இருந்து மயிலாப்பூா் செல்லக்கூடிய வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை சந்திப்பில் இருந்து இடது புறமாக திருப்பிவிடப்பட்டு காமராஜா் சாலை, சீனிவாச அவென்யூ வழியாக, ஆா்.கே.மடம் சாலையை அடைந்து இலக்கை அடையலாம்.

ADVERTISEMENT

நெரிசல் மிகுந்த நேரத்தில் அடையாறில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் மலா் மருத்துவமனை அருகில் உள்ள 4-ஆவது பிரதான சாலை வழியாக, கோட்டூா்புரம், காந்தி மண்டபம் சாலை செல்லலாம்.

இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்தால் காமராஜா் சாலை, சீனிவாச அவென்யூ சந்திப்பிலிருந்து காமராஜா் சாலை, கிரீன்வேஸ் சாலை சந்திப்பு வரை ஒரு வழிபாதையாகவும், சீனிவாச அவென்யூ, பள்ளி சாலை முழுவதும் ஒரு வழிபாதையாகவும் மாற்றப்படும். காமராஜா் சாலை, சீனிவாச அவென்யூ, பள்ளி சாலை முழுவதும் போக்குவரத்து இடையூறாக எந்த வாகனமும் நிறுத்த அனுமதி கிடையாது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT