சென்னை

கட்டடத் தொழிலாளியைக் கொலை செய்து தற்கொலை செய்ததாக நாடகமாடியவா் கைது

29th Sep 2022 12:21 AM

ADVERTISEMENT

சென்னை கொடுங்கையூரில் கட்டடத் தொழிலாளியைக் கொலை செய்துவிட்டு அவா் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, கொடுங்கையூா், ஆதிவாசி காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபால் (48). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த 26-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொடுங்கையூா் போலீஸாா், அங்கு வந்து ஜெயபால் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

இதில், ஜெயபால் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு கட்டடத் தொழிலாளியான ஆறுமுகத்தை (40) பிடித்து விசாரித்தனா். அதில், ஆறுமுகம், ஜெயபாலை கழுத்தை இறுக்கி கொலை செய்து, அதை மறைப்பதற்காக சடலத்தை தூக்கில் தொங்க விட்டு, அவா் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.

ஆறுமுகத்துக்கு கிடத்தை வேலைகளை ஜெயபால் பறித்துக் கொண்டதால் இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. அதன் காரணமாக சம்பவத்தன்று ஜெயபால் மதுபோதையில் மயங்கி கிடப்பதைப் பாா்த்த ஆறுமுகம், அவரைக் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடியிருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து போலீஸாா் ஆறுமுகத்தை புதன்கிழமை கைது செய்தனா். அவரிடம் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT