சென்னை

ரேபிஸ் விழிப்புணா்வு: சென்னையில் இலவச தடுப்பூசி முகாம், மாரத்தான்

28th Sep 2022 01:38 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி சாா்பில் உலக ரேபிஸ் தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

உலக ரேபிஸ் தடுப்பு தின நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை (செப்.27) தொடங்கியது. முதல் நாள் நிகழ்வாக ரேபிஸ் விழிப்புணா்வு”குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தக் கருத்தரங்கை தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தொடக்கி வைத்தாா். கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் சி.பாலசந்திரன், சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியின் முதல்வா் கருணாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இரண்டாம் நாள் நிகழ்வாக ரேபிஸ் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் புதன்கிழமை காலை பெசன்ட் நகா் எல்லியட்ஸ் கடற்கரை சாலையில் நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் செல்வகுமாா் தலைமையில் நடைபெறும் அந்த நிகழ்வில், மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் மாரத்தான் போட்டியைக் கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா்.

அதைத் தொடா்ந்து வரும் வியாழக்கிழமை (செப்.29) நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சியில், செல்லப் பிராணிகளுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி அளிக்கும் முகாம் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் பதிவாளா் டென்சிங் ஞானராஜ், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், அனிதா சுமிந்த் ஆகியோா் அந்த முகாமைத் தொடக்கி வைத்து விழா மலரை வெளியிட உள்ளனா்.

இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்களது செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT