சென்னை

தமிழக அரசுடன் கொரிய கட்டுமான பொறியியல் கழகத்தினா் ஆலோசனை

DIN

கொரிய நாட்டின் முன்னணி கட்டுமானப் பொறியியல் ஆலோசனைக் கழகத்தைச் சோ்ந்தவா்கள், தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவை சந்தித்துப் பேசினா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, கட்டுமானத் துறை தொடா்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரியாவில் நடைமுறையில் உள்ள பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, விரைவாகவும், எளிதாகவும் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டதாக அரசின் செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடா்பாகவும், தமிழ்நாட்டில் தொடங்கப்படவிருக்கும் பல்வேறு கட்டுமானப் பொறியியல் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக அரசின் செய்தியில்

கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரிய நாட்டின் கட்டுமான பொறியியல் ஆலோசனைக் குழுவின் ஆலோசகா் ஜயாங் இம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளா் பிரதீப் யாதவ், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் மணிவாசகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT