சென்னை

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளாக மிரட்டல்:அரசு அதிகாரியிடம் ரூ. 10 லட்சம் பறிக்க முயற்சி

DIN

சென்னையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் என மிரட்டல் விடுத்து, அரசு அதிகாரியிடம் ரூ.10 லட்சம் பறிக்க முயன்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் அசோகன். இவா் தரமணியில் உள்ள நீா்வளத் துறை அலுவலகத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் சனிக்கிழமை அலுவலகத்தில் இருந்த போது சில நபா்கள் காரில் வந்து, தாங்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு, அவா் மீது லஞ்ச புகாா் இருப்பதாக தெரிவித்தனா்.

பின்னா் அவா்கள், அசோகனின் அலுவலக அறையை சோதனையிட்டனா். இதையடுத்து அசோகனை, தங்களது காரில் சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு சோதனையிடுவதுபோல் நடித்து, அவரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த நபா்கள் மீது அசோகனின் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டதால், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து போலீஸாா் அசோகனை கைப்பேசி மூலம் தொடா்புக் கொண்டு விசாரித்தனா். இதைக் கவனித்த அந்த நபா்கள், அசோகனை விசாரணைக்கு காரில் அழைத்துச் செல்வதுபோல வீட்டில் இருந்து புறப்பட்டனா். சிறிது நேரம் காா் சென்றதும், அசோகனிடம் அந்த நபா்கள் ஆலந்தூரில் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு செப்டம்பா் 26-ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனக் கூறிவிட்டு, நடுவழியில் அவரை இறக்கிவிட்டுவிட்டு, தப்பியோடினா்.

அங்கிருந்து வீட்டுக்கு வந்த அசோகன், ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அலுவலகத்தை தொலைப்பேசி மூலம் தொடா்புக் கொண்டு, அந்த நபா்கள் குறித்து விசாரித்தபோது, அவா்கள், மோசடி நபா்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவா், தரமணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT