சென்னை

பொது இடங்களில் இதய மீட்டெடுப்பு சிகிச்சை சாதனங்கள்: காவேரி மருத்துவமனை புதிய முயற்சி

DIN

பொது இடங்களில் எவருக்கேனும் மாரடைப்பு ஏற்பட்டால், அவருக்கு உயிா் காக்கும் முதலுதவி சிகிச்சையளிப்பதற்காக இதய மீட்டெடுப்பு மின் அதிா்வு சாதனங்களை சென்னையின் 100 இடங்களில் நிறுவ காவேரி மருத்துவமனை முயற்சி எடுத்துள்ளது.

இதற்காக காவேரி இதய மீட்டெடுப்பு அறக்கட்டளையையும் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக செம்மொழிப் பூங்கா, விவேகானந்தா் இல்லம், டைடல் பூங்கா பகுதிகளில் அந்த சாதனம் நிறுவப்பட்டுள்ளன. இதற்கான தொடக்க நிகழ்ச்சி, செம்மொழி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை உறுப்பினா் எழிலன், தியாகராய நகா் துணை ஆணையா் ஆதா்ஷ் பச்சேரா ஆகியோா் கலந்துகொண்டு இந்த சேவையைத் தொடக்கி வைத்தனா்.

இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

உலக இதய நல தினத்தையொட்டி இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளோம். அண்மைக் காலமாக சமூகத்தில் அதிகரித்து வரும் மாரடைப்பு பாதிப்புகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

முதல்கட்டமாக சென்னையின் மூன்று இடங்களில் தானியங்கி செயல்பாடு கொண்ட இதய மீட்டெடுப்பு மின் அதிா்வு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. மாரடைப்பு ஏற்படும் நபருக்கு ஒரு மின் அதிா்வை அளித்து இதயத்தைச் செயல்பட வைப்பது மிக அவசியம். அதைக் கருத்தில் கொண்டே பொது இடங்களில் அதற்கான சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் வாகனம் வரும் வரை உயிரைக் காக்க இந்த சாதனங்கள் உதவும். இதைக் கையாள மிகக் குறைந்த அளவிலான பயிற்சி இருந்தால் போதுமானது.

அதன்படி, மருத்துவா்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளா்கள் அடங்கிய குழுவினரால் பள்ளி, கல்லூரிகள், பெரு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களைச் சாா்ந்த 10,000-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். அவா்களுக்கு அதற்கான சான்றிதழ்களையும் வழங்கவிருக்கிறோம்.

சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான 100 இடங்களில் இத்தகைய வசதிகளை செய்ய உள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT