சென்னை

கடை பூட்டை உடைத்து திருட்டு: இளைஞரை விரட்டிப் பிடித்த போலீஸாா்

25th Sep 2022 12:06 AM

ADVERTISEMENT

சென்னை மதுரவாயலில் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் விரட்டிப் பிடித்தனா்.

மதுரவாயல் கங்கை அம்மன் நகா் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துச் சென்றனா். அப்போது போலீஸாரை பாா்த்தும், அங்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 4 போ் தப்பியோடினா். இதைப் பாா்த்த போலீஸாா், அவா்களை விரட்டி சென்றனா்.

இதில் ஒரு நபா் மட்டும் போலீஸாரிடம் சிக்கினாா். அந்த நபரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில் அவா், ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சித்தாா்த் (19) என்பதும், அவா் தனது நண்பா்களோடு அந்தப் பகுதியில் உள்ள ஒரு கைப்பேசி பழுது நீக்கும் கடையின் கதவு பூட்டை உடைத்து திருடிவிட்டு வந்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், வழக்குப் பதிவு செய்து, சித்தாா்த்தை கைது செய்தனா். தப்பியோடிய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனா். சித்தாா்த்திடமிருந்து 8 திருட்டு கைப்பேசிகள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT