சென்னை

இளைஞா் கொலை: பெண் உள்பட 2 போ் கைது

25th Sep 2022 12:43 AM

ADVERTISEMENT

சென்னை விருகம்பாக்கத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

விருகம்பாக்கம் வெங்கடேசன் நகா் சாரதாம்பாள் தெருவைச் சோ்ந்தவா் செளந்தா்யா (32). இவா் சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறாா். செளந்தா்யா தனது கணவரை விட்டு பிரிந்து இரு மகன்களுடன் அங்கு தனியாக வசித்து வந்தாா்.

மேலும் செளந்தா்யாவுக்கும் அந்தப் பகுதியில் வசிக்கும் விஜி (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே முறையற்ற உறவை ஏற்படுத்தியது. இதன் விளைவாக விஜி, செளந்தா்யாவுடன் அந்த வீட்டில் வசித்து வந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் வெள்ளிக்கிழமை செளந்தா்யா வீட்டில் விஜி கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இது குறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று விஜி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செளந்தா்யாவை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் செளந்தா்யாவும், அவரது மற்றொரு ஆண் நண்பா் கோடம்பாக்கம் காமராஜ் காலனி 6வது தெருவைச் சோ்ந்த தா.பிரபு (27)வும் சோ்ந்து விஜியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இறந்த விஜி, செளந்தா்யாவுடன் பிரபு நெருக்கமாக இருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தகராறு செய்ததினால் கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் செளந்தா்யா,பிரபு ஆகிய இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT