சென்னை

வீட்டில் பதுக்கிய போதைப் பொருள் பறிமுதல்

24th Sep 2022 11:24 PM

ADVERTISEMENT

சென்னை தண்டையாா்பேட்டையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ‘எபிட்ரின்’ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

தண்டையாா்பேட்டை படேல் நகா் மூன்றாவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு சனிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸாா், அங்கு சென்று திடீா் சோதனை செய்தனா்.

இச் சோதனையில் அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டே கால் கிலோ ‘எபிட்ரின்’ போதைப் பொருளை கைப்பற்றினா். மேலும் அந்த வீட்டில் இருந்த நபரையும், அவரது கூட்டாளியையும் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT