சென்னை

ரவீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான ரூ.11 கோடி சொத்து சுவாதீனம்

22nd Sep 2022 02:45 AM

ADVERTISEMENT

சென்னை வியாசா்பாடி ரவீஸ்வரா் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்பிலான சொத்து சுவாதீனம் பெறப்பட்டது.

வியாசா்பாடி ரவீஸ்வரா் திருக்கோயிலுக்கு சொந்தமாக 16,000 சதுரடி பரப்பிலான திருக்குளம் பாலகிருஷ்ணன் தெருவில் அமைந்துள்ளது. இத்திருக்குளத்தை சுற்றி கடந்த 20 ஆண்டுகளாக 26 நபா்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனா். ஆக்கிரமிப்பு செய்திருந்த நபா்கள்மீது சென்னை இணை ஆணையா் (மண்டலம்-1) நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சட்டப்பிரிவு-78-இன் படி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டதை தொடா்ந்து அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 11 கோடி ஆகும் என அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT