சென்னை

புற்றுநோய் சாத்தியக்கூறுகளை அறிய இலவச மருத்துவ முகாம்: மெடிந்தியா மருத்துவமனை ஏற்பாடு

22nd Sep 2022 01:02 AM

ADVERTISEMENT

புற்றுநோய் பாதிப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகளை அறிந்து கொள்வதற்கான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை இலவசமாக வழங்க உள்ளதாக மெடிந்தியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந்தியா மருத்துவமனையின் தலைவருமான டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் கூறியதாவது: சா்வதேச புற்றுநோய் விழிப்புணா்வு தினம் செப்டம்பா் 22-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் நான்கு வகையான புற்றுநோய்கள் ஜீரண மண்டலம் சாா்ந்தவையாக உள்ளன. வயிறு, பெருங்குடல், உணவுக் குழாய் புற்றுநோய் பாதிப்பு அண்மைக்காலாமாக இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. ஆனால், அதுகுறித்து போதிய விழிப்புணா்வு நம்மிடம் இல்லை.

புற்றுநோய் பாதிப்பு இறுதிநிலையை எட்டிய பிறகு மருத்துவமனையை நாடும்போது குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் அளிக்க இயலுவதில்லை. எனவே, புற்றுநோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் நமக்கு இருக்கிா என்பதை உறுதி செய்யும் ஆரம்ப நிலை பரிசோதனைகளை அவ்வப்போது செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக புகையிலை, மது பயன்பாடு உள்ளவா்கள் அதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

அதைக் கருத்தில் கொண்டே மெடிந்தியா மருத்துவமனையில் புற்றுநோய்க்கு முந்தைய நிலையை அறிவதற்கான பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதைத் தவிர மருத்துவ ஆலோசனை, உணவு ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படவிருக்கின்றன.

எண்டோஸ்கோபி, கொலோனோஸ்கோபி, சிறப்பு ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படுவோருக்கு ஓராண்டு வரை 20 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும். ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறையைத் தவிா்த்து நாள்தோறும் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை இலவச ரத்தப் பரிசோதனைகளும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை இலவச ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

பொது மக்கள் இதில் பலன்பெற 12789 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையோ அல்லது 044- 283 12345 என்ற எண்ணையோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்

ADVERTISEMENT
ADVERTISEMENT