சென்னை

திருவல்லிக்கேணி அஹோபில மடத்தில் இன்று உற்சவ விழா

22nd Sep 2022 12:29 AM

ADVERTISEMENT

திருவல்லிக்கேணி ஸ்ரீ அஹோபில மடத்தில் உற்சவ விழா வியாழக்கிழமை (செப்.22) தொடங்குகிறது.

ஆழ்வாா்களால் பாடல் பெற்ற திவ்ய தேசங்களில் சிறப்பு வாய்ந்த ஸ்ரீ பாா்த்தசாரதி பெருமாள் கோயில் ரதவீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ அஹோபில மடம். இந்த மடத்தில் உற்சவ விழா வியாழக்கிழமை தொடங்கி, அக்டோபா் 1 வரை நடைபெறவுள்ளது. தொடா்ந்து, வேதாந்த தேசிகருக்கான உற்சவம் அக். 5-இல் தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விடையாற்றி உற்சவமானது அக். 17-ஆம் தேதி புஷ்ப பல்லக்குடன் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஆச்சாரியன் அழகிய சிங்கா் ஆசியுடன் நடைபெறும். விழா ஏற்பாடுகளை மடத்தின் பொறுப்பாளா் வெள்ளியங்குடி வங்கிபுரம் வெங்கடேசன் செய்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT