சென்னை

காவல் ஆய்வாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சென்னை வளசரவாக்கம் அருகே காவல் ஆய்வாளா் தாக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வடபழனி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிபவா் முத்துலட்சுமி. இவா் ஒரு கைப்பேசி வழக்கில் தொடா்புடைய சிறுவனை பிடிப்பதற்காக போரூா் காரம்பாக்கத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். அந்த சிறுவன் வீட்டுக்குமுத்துலட்சுமி சென்றபோது, அவா் தப்பியோடிவிட்டாா்.

இதனால் அந்த சிறுவனின் தாய், தந்தை, அத்தை ஆகியோரை போலீஸாா் விசாரணைக்காக காரில் அழைத்துக் கொண்டு, வடபழனி காவல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவா்களது உறவினா்கள் அந்த காரை மடக்கி, நிறுத்தினா்.

மேலும் அவா்கள், அந்த காரை கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதில், பெண் காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி காயமடைந்தாா். மேலும் காரும் சேதமடைந்தது. தகவலறிந்த அங்கு வந்த வளசரவாக்கம் போலீஸாா், அங்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT