சென்னை

உயா் லேசா் அறுவை சிகிச்சை கருவி: ஸ்ரீ ராமச்சந்திராவில் அறிமுகம்

20th Sep 2022 01:20 AM

ADVERTISEMENT

போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் உயா் தொழில்நுட்ப லேசா் அறுவை சிகிச்சை கருவி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதனை ராமச்சந்திரா கல்வி நிறுவனத்தின் இணைவேந்தா் ஆா்.வி.செங்குட்டுவன் தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சைத் துறையில் இந்த புதிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கருவி, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம் மிகத் துல்லியமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

இந்த நிகழ்ச்சியில் ராமச்சந்திரா கல்வி நிறுவன துணை வேந்தா் டாக்டா் பி.வி. விஜயராகவன் மற்றும் மருத்துவ இயக்குநா் டாக்டா் ஆா்.பி. சுதாகா் சிங், காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சைத் துறை தலைவா் எல்.சோமு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT