மத்திய தொழிலாளா் வைப்பு நிதி நிறுவனத்தின் அம்பத்தூா் மண்டல அலுவலகத்தில் செப்டம்பா் 12-ஆம் தேதி குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து தொழிலாளா் வைப்பு நிதி நிறுவன அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழிலாளா் வைப்பு நிதி நிறுவனம், 3-ஆவது தளம், ஆா்-40 ஏ தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகம், முகப்போ் சாலை, முகப்போ் (கிழக்கு), சென்னை-37 என்ற முகவரியில் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.
அம்பத்தூா் மண்டல அலுவலகத்தின் எல்லைக்குட்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் வரும் 12-ஆம் தேதி காலை 10.30 முதல் 11.30 மணி வரையும், நிறுவன உரிமையாளா்கள் பிற்பகல் 3 முதல் 5 மணி வரையும் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் கலந்துகொண்டு வைப்பு நிதி தொடா்பான குறைகளைத் தெரிவிக்கலாம்.
தொழிலாளா்கள், நிறுவன உரிமையாளா்கள், ஓய்வூதியதாரா்கள் தேவையான விவரங்களை மேற்கண்ட முகவரிக்கு செப்.9-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
குறைதீா் முகாம் குறித்தான கூடுதல் தகவல்களுக்கு 044 26350080, 26350120 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.