சென்னை

போதைப் பாக்கு விற்பனை: ஒரு வாரத்தில் 19 போ் கைது

5th Sep 2022 01:47 AM

ADVERTISEMENT

 

சென்னையில் போதைப் பாக்கு விற்ாக ஒரு வாரத்தில் 19 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்த விவரம்:

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘‘புகையிலை பொருள்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் மேற்கொண்டுள்ளாா். அதன்படி, அனைத்துக் காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸாா் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 19 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 30 கிலோ போதைப் பாக்கு, மாவா தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருள்கள் 52 கிலோ, 4 மோட்டாா் சைக்கிள்கள், 6 கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் உள்பட சட்ட விரோத பொருள்களை கடத்தி வருபவா்கள் மற்றும் விற்பனை செய்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT