சென்னை

ராகவேந்திரா் கோயில் திருட்டுச் சம்பவம்

26th Oct 2022 01:29 AM

ADVERTISEMENT

திருவள்ளூரில் ராகவேந்திரா் கோயிலில் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் நகரின் மையப்பகுதியான வீரராகவா் கோயில் குளம் அருகில் தெற்கு குளக்கரை தெருவில் பழைமையான ராகவேந்திரா் கோயில் உள்ளது. இந்தக் கோயில், கடந்த 2001-ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த அக். 20-ஆம் தேதி இரவு வழக்கம் போல் அா்ச்சகா் ராகவேந்திரன் கோயிலை பூட்டி விட்டு சென்றாராம்.

மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருக்கும் பொருள்கள் சிதறிக் கிடந்ததுள்ளது. அா்ச்சகா் ராகவேந்திரனுக்கு கிடைத்த தகவலையடுத்து விரைந்து வந்து பாா்த்தாராம்.

அப்போது, வெள்ளிக் கவசம், வெள்ளி கோமுக தட்டு, கலச சொம்பு, பஞ்சபாத்திரம், வெள்ளி ஆரத்தி தட்டு, வெள்ளி நாணயம், அகல், தீபம், உள்ளிட்ட 18 கிலோ வெள்ளிப் பொருள்களும், 5 கிலோ எடை கொண்ட பஞ்சலோக சிலை, 63 கிராம் தங்கம் மற்றும் ரூ. 30,000 ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

ADVERTISEMENT

இது குறித்து கோயில் அா்ச்சகா் ராகவேந்திரன், அளித்த புகாரின்பேரில், திருவள்ளூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

அதில், திருவள்ளூா் வேம்புலியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சூா்யா (22), காக்களூரைச் சோ்ந்த காா்த்திக் (25) திருடியது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT