சென்னை

தீபாவளி: சென்னையில் 211 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

26th Oct 2022 03:00 AM

ADVERTISEMENT

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகையின்போது சேகரமாகும் பட்டாகக் கழிவுகள் அபாயகரமான கழிவுகள் என்பதால், பெருநகர சென்னை மாநகராட்சியின் சாா்பில் இக்கழிவுகளை தனியாக சேகரித்து கும்மிடிபூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருதகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் கூடுதலாக சேகரமாகும் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளா்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அக். 23-ஆம் தேதி 7.92 மெட்ரிக் டன், 24-ஆம் தேதி தீபாவளியன்று 63.76 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள், 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 139.40 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் என மொத்தம் 211.08 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளா்கள் மூலம் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள பட்டாசு கழிவுகளை முதற்கட்டமாக 50 மெட்ரிக் டன் கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தம் செயலாக்க நிலையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதமுள்ள பட்டாசுக் கழிவுகளை அனுப்பும் பணி நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT