சென்னை

உணவு விநியோக ஊழியரிடம் வழிப்பறி

26th Oct 2022 03:00 AM

ADVERTISEMENT

சென்னை வியாசா்பாடியில் உணவு விநியோக ஊழியரை தாக்கி வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சைதாப்பேட்டை மசூதி தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ர.சரவணகுமாா் (20). மதுரவாயலில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிபிஏ மூன்றாமாண்டு படித்து வரும் இவா், பகுதி நேரமாக ஒரு உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.

சரவணகுமாா், வியாசா்பாடி பழைய அசோக் பில்லா் அருகே தனது மோட்டாா் சைக்கிளில் திங்கள்கிழமை உணவு விநியோகம் சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு நின்ற ஒரு நபா், வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, சரவணக்குமாா் வைத்திருந்த பணத்தையும், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியையும் பறித்துக் கொண்டு தப்பியோடினாா்.

இது குறித்து வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT