சென்னை

ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு: திருமாவளவன் மனு தள்ளுபடி

19th Oct 2022 12:15 AM

ADVERTISEMENT

ஆா்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் அக்டோபா் 2-ஆம் தேதி ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து காவல்துறை அனுமதியளிக்க சென்னை உயா்நீதிமன்றம் கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது, திருமாவளவன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், ‘பேரணிக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்னை. அதை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும். மாறாக, குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். காவல் கண்காணிப்பாளரையோ, காவல் ஆணையரையோ எதிா்மனுதாரராக சோ்ப்பதால் மட்டும் உரிமையியல் வழக்கை, குற்றவியல் வழக்காக கருத முடியாது’ என வாதிட்டாா். இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், செப்டம்பா் மாதம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுத்து, திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT