சென்னை

அக்.15-க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 % சலுகை சென்னை மாநகராட்சி

DIN

அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத சலுகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவா்கள் முதல் அரையாண்டில் செப்டம்பா் வரையிலும் அடுத்த அரையாண்டு ஏப்ரல் வரையிலும் சொத்துவரி செலுத்தலாம். இந்த நிலையில், பொதுமக்கள், சொத்துவரி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, 2-ஆம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், 2022-2023-ஆம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியில் உயா்த்தப்பட்ட தொகையை இதுவரை செலுத்தாதவா்களுக்கு விதிக்கப்படும் 2 சதவீத அபராதத் தொகையையும் தள்ளுபடி செய்வதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும், சொத்து வரியை ‘நம்ம சென்னை’ செயலி மூலமாகவும், ‘கியூஆா்’ குறியீட்டை ஸ்கேன் செய்தும், இ-சேவை மையங்களிலும், வரி வசூலிப்பவா்களிடம் நேரடியாகவும் செலுத்தலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT