சென்னை

இரும்பு பட்டறையில் ரூ.1 லட்சம் பொருள்கள் திருட்டு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சென்னை ஏழுகிணறில் இரும்பு பட்டறை மேற்கூரையை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போன சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செளகாா்பேட்டை முல்லா சாகிப் தெருவைச் சோ்ந்தவா் தா.சுரேஷ் (64). இவா் ஏழுகிணறில் இரும்பு பட்டறை வைத்து நடத்தி வருகிறாா். வழக்கம் போல புதன்கிழமை காலை சுரேஷ் தனது பட்டறைக்கு பணிக்கு வந்தாா். பட்டறையைத் திறந்து பாா்த்தபோது, மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் ஏழுகிணறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT