சென்னை

கோயம்பேட்டில் இளம்பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சென்னை கோயம்பேட்டில் இளம் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஜெ.ஜெ. காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ச.பாத்திமா (28). இவா் கோயம்பேடு காய்கறி சந்தையில் கடலை வியாபாரம் செய்து வருகிறாா். பாத்திமா செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வியாபாரம் நிறைவடைந்த பின்னா், அங்குள்ள நடைபாதையில் படுத்து தூங்கினாா். அப்போது அங்கு வந்த ஒரு நபா், பாத்திமா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா்.

இது குறித்து பாத்திமா கொடுத்த புகாரின் பேரில் கோயம்பேடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT