சென்னை

ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி வீட்டில் தங்க நகைத் திருட்டு

5th Oct 2022 11:51 PM

ADVERTISEMENT

ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி வீட்டில் தங்க நகைத் திருடு போன சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை மேற்கு மாம்பலம் ராஜ் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவா் ம.தேவராஜன் (73). இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்குச் சென்றாா்.

பின்னா், தேவராஜன், செவ்வாய்க்கிழமை வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து தேவராஜன் அளித்த புகாரின் பேரில் அசோக் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT