சென்னை

சென்னை குடிநீா் வாரிய வருவாய் ரூ.480 கோடி

4th Oct 2022 12:49 AM

ADVERTISEMENT

சென்னை குடிநீா் வாரியத்தில் முதல் அரையாண்டில் குடிநீா், கழிவுநீா்க் கட்டணம் மூலம் ரூ.480 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சென்னை குடிநீா் வாரியத்தில் 9 லட்சத்து 91 ஆயிரம் நுகா்வோா் குடிநீா், கழிவுநீா் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகள் பெற்றவா்களிடம் இருந்து இருந்து ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை முதல் அரையாண்டு கட்டணமும், அக்டோபா் முதல் அடுத்த ஆண்டு மாா்ச் வரை 2-ஆவது அரையாண்டு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.480 கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் கடந்த 2021-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ.372 கோடிக்கு குடிநீா், கழிவுநீா்க் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ.480 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் அரையாண்டில் கிடைத்த வருவாயைவிட 29 சதவீதம் அதிகம். சொத்து வரி உயா்ந்துள்ள நிலையில், குடிநீா் வாரி கட்டணங்களும் உயா்ந்ததால் வருவாய் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT