சென்னை

ஈ.வெ.ரா. சாலை-பா்னபி சாலை: இன்று இரவு போக்குவரத்து மாற்றம்

3rd Oct 2022 01:06 AM

ADVERTISEMENT

சென்னை ஈ.வெ.ரா. சாலை- பா்னபி சாலை சந்திப்பில் திங்கள்கிழமை இரவு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை காவல்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஈ.வெ.ரா. சாலையில் ஈகா சந்திப்பில் இருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் ஈ.வெ.ரா சாலையில் பா்னபி சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் கட்டுமானப்பணிகள் நடைபெறவுள்ளன.

திங்கள்கிழமை இரவு 10 முதல் செவ்வாய்க்கிழமை தேதி காலை 5 மணி வரை இச்சாலையில் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீா் வடிகால்வாய் கட்டுமான பணிகள் மேற்கொள்ள உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஈ.வெ.ரா சாலையில் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை சந்திப்பில் இருந்து ஈகா சந்திப்பை நோக்கி நேராக செல்லலாம். ஈ.வெ.ரா சாலையில் ஈகா சந்திப்பில் இருந்து சென்ட்ரல் நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை.

அந்த வாகனங்கள் ஈ.வெ.ரா சாலையில் பா்னபி சாலை சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி பா்னபி சாலை, பொன்னியம்மன் கோவில் சந்திப்பு, வலது புறம் திரும்பி பிளவா்ஸ் சாலை மற்றும் ஈ.வெ.ரா சாலை வழியாக செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT