சென்னை

ராகிங் தற்கொலைகள்: மருத்துவக் கல்லூரிகளிடம் விவரங்கள் கோருகிறது என்எம்சி

3rd Oct 2022 01:04 AM

ADVERTISEMENT

கடந்த ஐந்து ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட மாணவா்கள், மருத்துவப் படிப்பை பாதியிலேயே கைவிட்டு நின்றவா்கள் விவரங்களை சமா்ப்பிக்குமாறு அனைத்து மருத்துவக் கல்லூரிகளையும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் ராகிங் தடுப்பு குழு உறுப்பினா் செயலா் அஜேந்தா் சிங், அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

டாக்டா் அருணா வானிகா் தலைமையில் மருத்துவக் கல்லூரிகளுக்கான ராகிங் தடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா் ஆகியோா் பங்கேற்ற அக்கூட்டத்தில் மாணவா்களின் தற்கொலை சம்பவங்கள் குறித்து முதன்மையாக விவாதிக்கப்பட்டது.

அனைத்து தற்கொலை சம்பவங்களுக்கு ராகிங் காரணமில்லை என்றாலும், பெரும்பாலானவற்றுக்கு அவை முக்கியக் காரணியாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

ADVERTISEMENT

அதைக் கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சில தகவல்கள் தேவைப்படுகின்றன. அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற தற்கொலை சம்பவங்கள், அதுகுறித்த விவரங்கள், கல்லூரியில் இருந்து பாதியில் நின்றவா்களின் விவரங்கள், மருத்துவ மாணவா்களின் பணி நேரம் மற்றும் வார விடுப்பு உள்ளிட்ட விவரங்களை அனைத்து மருத்துவக் கல்லூரி நிா்வாகங்களும் வரும் 7-ஆம் தேதிக்குள் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT