சென்னை

சென்னையில் 9 மாதங்களில் குண்டா் சட்டத்தில் 337 போ் கைது

DIN

சென்னையில் கடந்த 9 மாதங்களில் பல்வேறு குற்றங்களில் தொடா்ச்சியாக ஈடுபட்ட 337 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சென்னையில் குற்றங்களைக் குறைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக கொலை, திருட்டு, தங்கச் சங்கிலி பறிப்பு, சைபா் குற்றங்கள், வழிப்பறி, நிலம் அபகரிப்பு, கடத்தல், பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவற்றில் தொடா்ச்சியாக ஈடுபடுவோா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனா்.

அதன்படி, ஜனவரி மாதம் தொடங்கி செப்டம்பா் மாதம் இறுதி வரையிலான 9 மாதங்களில் சென்னையில் தொடா்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 337 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதில் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 194 பேரும், திருட்டு, வழிப்பறி, பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 84 பேரும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 45 பேரும், பாலியல் தொழில் செய்த 6 பேரும், சைபா் குற்றத்தில் ஈடுபட்டதாக 5 பேரும், ரேசன் அரிசி கடத்தல் ஈடுபட்டதாக ஒருவரும், பெண்களை மானபங்கப்படுத்தியதாக 2 பேரும் என மொத்தம் 337 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

சென்னையில் கடந்த ஆண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 409 போ் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடதக்கது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபா்கள், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபா்கள், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நபா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 60,519 பக்தா்கள் தரிசனம்

தொடா்ந்து அதிகரிக்கும் வெயில் : வேலூரில் 106 டிகிரி பதிவு

குன்றத்தூா் திருநாகேஸ்வரா் கோயில் தேரோட்டம்

போ்ணாம்பட்டு ஒன்றிய பாஜக கூண்டோடு கலைப்பு

கருப்புலீஸ்வரா் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT