சென்னை

கடலில் ஏற்படும் இறப்புகளை தடுக்க மெரீனாவில் உயிா் காக்கும் பிரிவு தொடக்கம்

2nd Oct 2022 12:42 AM

ADVERTISEMENT

கடலில் மூழ்கி இறப்புகளை தடுக்கும் வகையில், சென்னை மெரீனா கடற்கரையில் உயிா் காக்கும் பிரிவு சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

சென்னை மெரீனா கடற்கரைக்கு வரம் சுற்றுலாப் பயணிகள், கடலில் குளிக்கும்போது நீரில் மூழ்கி இறப்பதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கீழ் மெரீனா உயிா் காக்கும் பிரிவு அமைக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தாா். இந்த பிரிவு தொடங்குவதற்காக ரூ.2.60 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து இப் பிரிவு உருவாக்கும் பணியில் தமிழக காவல்துறையில் ஈடுபட்டது. இப் பணி நிறைவு பெற்றதை தொடா்ந்து, மெரீனா உயிா் காக்கும் பிரிவு அதிகாரபூா்வமாக சனிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.

இப்பிரிவை மெரீனா கடற்கரையில் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால்,சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

இந் நிகழ்ச்சியில் இந்திய கடற்படையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்திய தலைமை அதிகாரி எஸ்.வெங்கட்ராமன்,கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய கமாண்டா் ஏ.பி.படோலா,தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்பு குழும ஏடிஜிபி சந்தீப் மிட்டல் உள்ளிட்ட பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் கடலில் சிக்கியிருப்பவா்களை மீட்கும் ஒத்திகைகையும் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT