சென்னை

ராஜரத்தினம் விளையாட்டரங்கில் காவலா்களுக்காக நவீன நூலகம் திறப்பு

2nd Oct 2022 12:28 AM

ADVERTISEMENT

சென்னை ராஜரத்தினம் விளையாட்டரங்கில் காவலா்களுக்காக அமைக்கப்பட்ட நவீன நூலகம், உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் போலீஸாா், அவா்களது குடும்பத்தினருக்கு புதிதாக நூலகம், பெண் காவலா்களுக்காக உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தது. இப்புதிய கட்டடங்கள் திறப்பு விழாவுக்கு பெருநகர காவல்துறை தலைமையிட கூடுதல் ஆணையா் ஜெ.லோகநாதன் தலைமை வகித்தாா். துணை ஆணையா்கள் , ள் செந்தில்குமாா், ராமமூா்த்தி, செளந்தராஜன், கோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெருநகர காவல்துறையின் ஆணையா் சங்கா் ஜிவால், நூலம்க, உடற்பயிற்சி கூடத்ம் ஆகியவற்றை திறந்துவைத்து பேசியது:

காவலா் மேம்பாட்டு நல நிதியில் இருந்து ரூ.50.44 லட்சம் மதிப்பில் நுாலகம், உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. நூலகத்தில் புத்தகங்கள் படிப்பதற்கு தனித்தனி அறையும், இணையத்தளம் வாயிலாக சட்டம், பல்வேறு நீதிமன்றங்களின் ஆணைகள்,புத்தகங்கள் படிக்க குளிரூட்டப்பட்ட அறையில் கணினி வசதி உள்ளது. நூலக்கத்தில் மொத்தம் 56 ஆயிரத்து 485 புத்தகங்கள் உள்ளன.

ADVERTISEMENT

காவலா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் காவல்துறை உயா் அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT