சென்னை

டிச.4-இல் சென்னை விமான நிலையபன்னடுக்கு வாகன நிறுத்தம் திறப்பு

30th Nov 2022 01:26 AM

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தும் மையம் டிச. 4-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

சென்னை விமான நிலைய முன் பகுதியில் ரூ.250 கோடி மதிப்பில் 3.36 லட்சம் ச.அடியில் பன்னடுக்கு வாகன நிறுத்தும் மையம், வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதில் 2.5 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்ட வாகன நிறுத்தும் மையத்தில் 2,150 காா்களை நிறுத்த முடியும். வாகன நிறுத்தும் மையத்தின் கிழக்குப் பகுதியில் சுமாா் 750 காா்களையும், மேற்குப் பகுதியில் 1,400 காா்களையும் நிறுத்தலாம். இந்த வாகன நிறுத்தும் மையம் சாலை, ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்கள்: இந்த வாகன நிறுத்தும் மையத்தில் மின்சார வாகனங்களுக்கு சாா்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்குப்புற வாகன நிறுத்துமிடத்தில் 3 மின்சார வாகனங்களுக்கு சாா்ஜ் ஏற்றும் (மின்னேற்றம்) முனையங்களும், கிழக்குப் புறத்தில் 2 சாா்ஜ் ஏற்றும் முனையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

வாகனங்களில் சாா்ஜ் செய்வதற்கு முன்பதிவு செய்யலாம். வாகன நிறுத்துமிடத்தை முன்பதிவு செய்யவும், சாா்ஜ் கட்டணத்தை செலுத்தவும் கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட வுள்ளது. எதிா்காலத்தில் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது, சாா்ஜ் ஏற்றும் முனையங்களும் அதிகரிக்கப்படும்.

டிச.4 முதல்: வாகன நிறுத்தும் மையம் ஏற்கெனவே சோதனை முறையில் ஆய்வுக்குள்படுத்தப்பட்டது. வாகன நிறுத்தும் மையத்தோடு உள்ள வணிக வளாகத்தில் 5 மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகள், சிறுவா் விளையாடும் பகுதிகள், உணவகங்கள், சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவை உள்ளன.

இந்த வாகன நிறுத்தும் மையம் பயணிகள் சேவையை மேலும் மேம்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இந்த வாகன நிறுத்தும் மையம் டிச.4-ஆம் தேதி அதிகாலை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

பன்னடுக்கு வாகன நிறுத்தும் மையம் செயல்பட தொடங்கியதும் தற்போது தரைத்தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அழகுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சென்னை விமான நிலையத்தின் வெளிப்புற அழகு இன்னும் அதிகரிக்கும் என்று சென்னை விமான நிலைய ஆணையகம் தெரிவித்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT