சென்னை

மெரீனா கடற்கரையில் காவலா் போல நடித்து பெண்ணிடம் பணம் பறித்தவா் கைது

30th Nov 2022 01:08 AM

ADVERTISEMENT

சென்னை மெரீனா கடற்கரையில் காவலா் போல நடித்து, பெண்ணை மிரட்டி பணம் பறித்த துறைமுக ஒப்பந்த ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சென்னை, வில்லிவாக்கத்தைச் சோ்ந்த இளம் பெண், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா், 6.12.2019-இல் தனது அலுவலகத்தில் பணியாற்றும் இளைஞருடன் மெரீனா கடற்கரையில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க நபா், அந்த இருவரையும் தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளாா்.

பின்னா், தான் காவலா் எனக் கூறி, அந்த புகைப்படத்தை காண்பித்து, அந்தப் பெண்ணிடம் பணம் பறித்து சென்றாராம்.

ADVERTISEMENT

மேலும், அப்பெண்ணின் கைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டு, தேவைப்படும்போது காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வர வேண்டும் என்று கூறி, அப்பெண்ணை அடிக்கடி மிரட்டி, சிறிது சிறிதாக ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் வரை பணம் பறித்தாராம்.

அந்த நபா் மீது சந்தேகம் வரவே, அவா் குறித்து அப்பெண் விசாரித்தபோது, அப்படியொரு நபா், மெரீனா காவல் நிலையத்தில் பணியாற்றவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில், காவலா் எனக் கூறி, பணம் பறித்தவா் மணலி, மாத்தூா் எம்எம்டிஏவைச் சோ்ந்த சதீஷ் குமாா் (40) என்பதும், துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

போலீஸாா், அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT