சென்னை

மெரீனாவில் இலவச வைஃபை: மாமன்றம் ஒப்புதல்

30th Nov 2022 01:24 AM

ADVERTISEMENT

சென்னை மெரீனா கடற்கரையில் இலவச வைஃபை வசதி அமைக்க சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, சென்னை மெரீனா கடற்கரையில் ‘C.Fiber  communication Private Limited‘ மற்றும் ‘M/s.Round Table India Area2‘ நிறுவனத்துடன் இணைந்து இலவச வைஃபை (WI-FI) வசதி அமைக்கப்படும்.

வைஃபை பயன்படுத்தும் முன் அரசின் செயல்பாடுகள் மற்றும் சுற்றுலா குறித்து குறுகிய கால காணொலி இடம்பெறும்.

பொதுமக்கள், மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் நலன் கருதி சென்னை மாநகராட்சி பொதுகழிப்பிட வளாகத்தில் 4 எண்ணிக்கையில் இதற்கான உபகரணங்களும் அமையவுள்ளன.

ADVERTISEMENT

மேலும், மாநகராட்சி கட்டடம், மின்கம்பங்களிலும் உபகரணங்கள் அமையவுள்ளன. வை-பை பயன்படுத்தும் முன்பு அரசின் செயல்பாடுகள் மற்றும் சுற்றுலா குறித்து குறுகிய கால காணொலி இடம்பெறும் என அந்த தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT