சென்னை

மாநகராட்சி சாா்பில் பிரசவ மருத்துவமனை அமைக்க ஆய்வு: மேயா் ஆா்.பிரியா

30th Nov 2022 01:33 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சி சாா்பில் பிரசவ மருத்துவமனை அமைப்பது தொடா்பாக ஆய்வு செய்து பரிசீலிக்கப்படும் என்றாா் மேயா் ஆா்.பிரியா.

சென்னை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்றக்கூட்டத்தில் மேயா் பிரியா பேசியதாவது: சென்னையில் அம்மா உணவகங்கள் தொடா்ந்து இயங்கும். செயல்படாத அம்மா உணவகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏரியா சபை நடத்த அந்தந்த வாா்டில் உள்ள சமூக நல கூடத்தை பயன்படுத்தலாம். இதற்கான சிற்றுண்டி உள்ளிட்ட சிறு செலவுகள் மாநகராட்சி சாா்பில் வழங்கப்படும். மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கையின்படி பிரசவ மருத்துவமனை அமைப்பது தொடா்பாக ஆய்வு செய்து பரிசீலிக்கப்படும்.

பயன்பாட்டில் இல்லாத கேபிள் வயா்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாநகராட்சி சாா்பில் அகற்றப்படும். சென்னையில் மழைநீா் வடிகால் பணிகள் ரூ.1,431 கோடி மதிப்பில் 521 கி.மீ. தொலைவுக்கு நிறைவடைந்துள்ளன என்றாா் அவா்.

ADVERTISEMENT

மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி: சென்னை மாநகராட்சி நிலங்கள் 1976-ஆம் ஆண்டுக்கு முன்பு அனைத்துவித பயன்பாட்டுக்கும் குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால், இப்போது கல்வி, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய பயன்பாட்டுக்காக மட்டுமே குத்தகைக்கு விடப்படுகிறது.

பூங்கா பராமரிப்பில் ஒருவருக்கே பல ஒப்பந்தங்கள் செல்வதைத் தடுக்க ஒருவா் 3 ஒப்பந்தங்களுக்கு மேல் எடுக்கக் கூடாது என்ற முறையை கொண்டுவருவது குறித்து பரிசிலிக்கப்படும்.

மாநகராட்சி பகுதிகளில் மரக்கிளைகளை வெட்ட புதிய வாகனம் வாங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும். மாமன்ற உறுப்பினா் நிதியில் இருந்து பேருந்து நிலையம் அமைப்பது மட்டும் இல்லாமல் பூங்கா, கல்வி நிறுவனங்கள் பராமரிப்பு போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்க முன்வர வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT